Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட வளைவு சிலரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றத் தலைவரும், சர்வ மத ஒன்றிய ஏறாவூர் இணைப்பாளருமான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.கு. லிகிதராஜக்குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (04) வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கையிலேயே, அவர் தமது கண்டணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சைவ மக்களை மாத்திரம் அல்லாது, மனித நேயமுள்ள எவரையுமே இந்தச் சம்பவம் கடும் வேதனைக்கு உள்ளாக்கும் எனவும் இன்றைய சூழலில் மத நல்லிணக்கத்துக்கான தேவைப்பாடும் அர்ப்பணிப்பும் விட்டுக்கொடுப்புகளும், மிகுந்த தேவையாக உள்ளனவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக நல்லெண்ணத்தை செயலில் காட்டி, உடைக்கப்பட்ட வளைவை சீர்செய்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள முன்வர வேண்டுமெனவும், அவ்வறிக்கையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago