Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 24 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக, அம்மாகாணத்தின் முதல் புற்தரை (Turf) கிரிக்கெட் அரங்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த மைதானம், புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டுக் கழக அங்கத்துவர்களின் நிதி உதவியோடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சத்துருக்கொண்டானில், கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
2017ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் அணித்தலைவர் பந்துல வர்ணபுரவின் ஆளுகையில் இந்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டிருந்திருந்தன.
மைதானம் முன்னரே கட்டி முடிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கொவிட்-19 வைரஸ் தொற்று அடங்கலாக நாட்டின் சில அசாதாரண சூழ்நிலைகள் அதனை பிற்போட்டிருந்தன.
தற்போது பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மைதானத்தில் 30 கிரிக்கெட் வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு, மைதானத்தின் நடுவே ஐந்து புற்தரை களங்கள் (Wickets) அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரம் வீரர்களின் பயிற்சிக்காக இங்கே ஆறு வலைப்பயிற்சி மையங்களும் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அதிநவீன இலத்திரனியல் ஸ்கோர் பலகை (Scoreboard), நகர்த்தக்கூடிய கறுப்பு வெள்ளை பார்வைத்திரை (Screen) என்பனவும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
15 minute ago
33 minute ago