2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

திறப்பு விழா...

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் வழிகாட்டலில் பிரதமரின் ஆலோசனைக்கமை, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் 10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த பிரிவெனா (பௌத்த சமய பாடசாலை), பௌத்த மதகுருமார் விடுதி இன்று(12) காலை கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விஜித வெலகெதர , இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தசித்த பனன்வல, மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராம விகாராதிபதி அம்பிட்டடிய சுமணரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், வடக்கு - கிழக்கு மாகாண பிரிவெனா பணிப்பாளர் கிரிந்திவெல சோமரத்ன தேரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு, மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X