Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் சுதந்திரமான உரிமைக்கும் தன்னுயிரை ஈந்து வந்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் மற்றும் இரத்ததான நிகழ்வுகள், வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டு மைதானத்தில் இன்று (26) இடம்பெற்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் கு.குணசேகரன் தலைமையில் தியாகி திலீபன் வீரச்சாவடைந்த 10.10 மணியளவில் ஈகைச் சுடரேற்றி, மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டொக்டர். கே.விவேகானந்தநாதன் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட இரத்ததான நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பதுடன், யுத்தத்தில் அங்கவீனர்களான நான்கு பேருக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும் என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்த திலீபன், 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரம் எதுவுமின்றி, தமிழ் மக்களது விடிவுக்காய் தனது உயிரை ஈகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .