Editorial / 2021 நவம்பர் 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்,
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்சம் முழுமையாக நீங்காத நிலையை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் நடமாடுவது அவதானிக்க படுவதால், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது, சுகாதார பாதுகாப்புடன் செயற்பட்டு, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மிகவும் அவதானத்துடன் பொது மக்களை செயல்படும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறையும் எளிமையான முறையில் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் கொரோனா தொற்றை குறைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனாவை நாட்டிலிருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன், சுதாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக தங்களது நாளாந்த கருமங்களை ஆற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025