Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 மார்ச் 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண நிர்வாக செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு, தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரவித்தார்.
ஆளுநராகப் பதவியேற்ற பிற்பாடு, முதன் முறையாக ஏறாவூருக்கு நேற்று (24) வருகை தந்த அவர், அங்கு அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில், ஒரு செயலாளருக்கு 4 மேலதிகச் செயலாளர்கள். ஒரு மாகாணப் பணிப்பாளருக்கு 4 மேலதிகப் பணிப்பாளர்கள், மாகாண கல்வியமைச்சிலே 350 அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்களத்திலே 200 அலுவலர்கள், 18 வலயக் கல்விப் பணிப்பாளர்கள், எல்லா வலயக் கல்வி அலுவலகத்திலும் ஆகக் குபுறைந்தது தலா 50 அலுவலர்கள், 49 பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், 1,450 அதிபர்கள், 450 கல்விச் சேவை அதிகாரிகள், 21 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர் எனச் சுட்டிக்காட்டினார்.
எனினும், இவ்வளவு அலுவலர்கள் இருந்தும், கிழக்கு மாகாணம் கல்வி அடைவு மட்டத்தில் 9ஆவது இடத்தில் உள்ளதென்றால், இதுபற்றி நாம் சிந்தித்து, மாற்றம் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
சுகாதாரத்திலும் கிழக்கு மாகாணம் 9ஆவது இடத்தில் உள்தாக சுட்டிக்காட்டிய ஆளுநர், இவை தொடர்பில் நிர்வாக செயற்பாடுகளில், அதிகாரிகளின் மன நிலையில், சிந்தனைகளில், போக்குகளில் மாற்றம் வேண்டுமென்றார்.
அந்த மாற்றத்தை நோக்கியே தான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் எனினும், அடுத்த வருடம் ஜனவரிக்குள்ளாக தான் தனது ஆளுநர் பதவியை நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, கிழக்கு மாகாணத்தை முழுமையான நிர்வாக அபிவிருத்திகளில் மாற்றுத் திட்டங்களை வகுத்து, அவற்றைச் செயலுருப்பெறச் செய்து, கையளித்து விட்டே, தான் மீண்டும் மத்திய அரசியலுக்குள் சென்று பணியாற்றவுள்ளதாகவும், ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago