Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அடிப்படைத் தேவைகள் முழுமையாக பாதிப்படைந்து வறுமையில் வாடுகின்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தேர்தலை ஒத்திவைக்குமாறு, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா துரைரெத்தினம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போதைய சூழ்நிலையில் குறைந்தது 05 வருடங்கள் பொருளாதார ரீதியான பலவீனங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்ததைப் பொறுத்தவரையில் மிகவும் சிறப்பான முறையில் மாவட்டச் செயலாளர் தலைமையில் அரசாங்கமும், சுகாதாரப் பணிப்பாளர், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், உள்ளூராட்சி சபைகள், ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் முழுமையாக தம்மை அர்ப்பணித்து சேவைகளை செய்து வருவது பாராட்டக்கூடியது.
“மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு வரட்சியும், மீன் பிடித்தொழில் செய்பவர்களுக்கு வறுமையும், கூலித் தொழில் செய்பவர்களுக்கு எவ்வித வருமானமும் இன்றியும், ஏனைய கால்நடைப் பண்ணையாளர்களுக்கும், கால்நடைகளுக்கு குடிநீர் இன்றியும், ஓட்டோ சாரதிகளுக்கு உணவின்றியும், ஏனைய துறைசார்ந்த தொழில் செய்வோரும், தனியார் நிறுவனங்கள், வர்த்தகநிலையங்கள், தொழில்சாலைகள், உணவு விடுதிகள், ஏன் அரச உத்தியோகத்தர்களுக்கும் கூட அன்றாட உணவுக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.
“முதலில் இவர்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதன் பிற்பாடு, தேர்தல் சம்பந்தமாக இம் மாவட்டத்தில் ஆலோசிக்க முடியும். சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவோர் ஒருசில பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள்களை கொடுத்து வாக்குகளை பெற முடியுமென நினைக்கின்றனர்.
“எமது சமூகம், தமிழ் மக்களின் உரிமைக்காக வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். உரிமைகளை விட்டுக் கொடுக்க எந்தச் சந்தர்ப்பத்திலும் விலை போக வில்லை என்பதை புரிந்துகொண்டு, மனிதாபிமமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“எனவே, அனைவருக்கும் வறுமைகளைப் போக்குவதற்கு நிதி ஓதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்படுகின்றது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago