2025 மே 19, திங்கட்கிழமை

‘தேர்தல் காலத்துக்காக அடிப்படையில் இருந்து மாற்றம் பெற முடியாது’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தேர்தல் காலம் வந்து விட்டமையால், விழாக்காலம் எடுக்கின்றார்கள் என்ற காரணத்தால், எங்களது அடிப்படையில் இருந்து மாற்றம் பெற முடியாது” என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு, ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எல்.ரி.புர்க்கான் தலைமையில், மீராவோடையில் நேற்று (06) இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நல்ல அரசியல், பேச்சு, பண்பாடுகள், விழுமியங்கள், இந்தச் சமூகத்துக்கும், இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு, அரசியல் தலைவர்களுக்கு இருக்கின்றது.

“அரசியல் அதிகாரம் உயரலாம், பணியலாம், இல்லாமல் போகலாம். ஆனால், நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தால் கிடைக்கும் பணத்தைக் கல்விக் கூடங்களுக்காக அதிகமாகச் செலவு செய்திருக்கின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X