Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மனிதவள அபிவிருத்தி சபையால் மாபெரும் தொழிற்சந்தையும் வழிகாட்டலும், கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில், நாளை மறுநாள் (28) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சின் மனிதவளப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் தெரிவித்தார்.
இந்நிகழ்வு, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த, சித்தியடையாத, தொழிற்சார் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் தேடும் இளைஞர், யுவதிகளை மையப்படுத்தி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, கிழக்கு பல்கலைக்கழகம், மனிதவலு திணைக்களம், மாவட்ட வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளம், முதலீட்டு சபை, மாவட்டச் செயலகம், அவுஸ்திரேலியன் எய்ட், யூ லீட் நிறுவனம் போன்றவற்றுடன் தொழிற்சார்பயிற்சி நிறுவனங்களால் இணைந்து, இத்தொழிற்சந்தையை ஒழுங்கு செய்துள்ளன.
சுமார் 3,000 இளைஞர், யுவதிகளை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சந்தையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் இளைஞர், யுவதிகளைக் பங்குபற்றி நன்மையடையுமாறும், சி.தணிகசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago