2025 மே 14, புதன்கிழமை

தொழிற் சந்தை கலந்துரையாடல்

வடிவேல் சக்திவேல்   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேலையில்லாத படித்த இளஞ்சமுகத்தினரின் தொகை அதிகரித்துக் கொண்டு வருகின்ற மறுபுறத்தில் தொழில்தருநர்களின் திறனுள்ள தொழிலாளர்களுக்கான கேள்வியும் அதிகரித்துக் கொண்டு வருகின்றமை நாட்டுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இந்த நிலையைப் படிப்படியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அமைச்சு மட்டத்தில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபையினரால் தொழில் சந்தை, தொழில் வழிகாட்டல் நிகழ்வு, மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக, இந்த நிகழ்வை கிழக்குப் பல்கலைக்கழத்துடன் இணைந்து நடத்துவதற்கான கலந்துரையாடல், அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எப்.சி.ராகல், சிரேஷ்ட விரிவுரையாளர்களான எ.அன்று, சு.ஜெயப்பிரபா ஆகியோர் கலந்துகொண்டு நேற்று (04) கலந்துரையாடினர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களுடன் உயர்தரம் படித்துவிட்டு, தொழில், கல்வியைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத இளைஞர்களும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென, உபவேந்தர் வேண்டிக் கொண்டார்.

அத்துடன், இந்நிகழ்வை அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடத்த எல்லா வகையான உதவிகளையும் செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டம் மார்ச் மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X