2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேக்குக்குற்றிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, சந்தனமடு ஆற்றை அண்டியுள்ள காட்டுப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக ஏற்றிக் கொண்டுவரப்பட்ட  தேக்கு மரக்குற்றிகளுடன் இரு சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், உழவு இயந்திரத்துடன் 10 அடி நீளமான 18 மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, குறித்த பகுதியில் மறைந்திருந்து இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X