2025 மே 13, செவ்வாய்க்கிழமை

த.தே.கூவின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச தாய்மொழித் தின நிகழ்வுகள், மட்டக்களப்பு - கல்லடி மீன் இசைப் பூங்காவில், நேற்று  (24) நடைபெற்றன.

கல்லடிப் பாலத்தின் அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலைக்கு, கொழும்பு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைக் கோகிலம் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, தாய்மொழியின் தொன்மை பற்றி, கம்பவாரிதி சொற்பொழிவாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும், இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X