Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகர சபையின் கடந்த அமர்வின் கூட்டறிக்கை தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே இன்று (11) முரண்பாடுகள் ஏற்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபையின் 34ஆவது அமர்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சபை அமர்வுகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பான நிலையில், கடந்த அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு, அதனை அங்கிகரிக்கமாறு சபை மேயரால் கோரப்பட்டது.
கடந்த அமர்வின் கூட்டறிக்கையில், இளைஞர் விவசாய பண்ணை அமைப்பதற்கு மாநகர சபையினால் காணி வழங்கப்பட்டது. இது தொடர்பிலான விடயங்களில் பிரச்சினையுள்ளதாகவும் அவை திருத்தப்படவேண்டும் எனவும் பிரதி மேயர் க.சத்தியசீலன் இதன்போது தெரிவித்தார்.
காணிக்குரிய நிலையியல் குழுவொன்று, மாநகர சபையில் உள்ள நிலையில், காணி அதிகாரங்களை முற்றுமுழுதாக மேயர் கையிலெடுக்கும் வகையில் குறித்த தீர்மானத்தில் காணப்படுவதாகவும் அவை திருத்தப்படவேண்டுமெனவும் பிரதி மேயர் தெரிவித்தார்.
எனினும், இது கடந்த அமர்வில் ஆராயப்பட்ட விடயமெனவும் இந்த அமர்வில் குறித்த விடயத்தை ஆராயவேண்டுமானால் பிரிதொரு தினத்தில் அது பிரேரணையாக கொண்டுவரப்பட்டே ஆராயமுடியுமெனவும் தற்பொழுது கூட்டறிகையில் ஏதேனும் பிழையிருந்தால் மட்டுமே திருத்தமுடியுமெனவும் மேயரால் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாநகர சபை உறுப்பினர்களிடையே இது தொடர்பிலான பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .