Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குசலானமலைப் பகுதியில்; மறைத்துவைக்கப்பட்டிருந்த ரீ -56 ரக தன்னியக்கத் துப்பாக்கியொன்றை இன்று வியாழக்கிழமை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இத்துப்பாக்கியை மீட்டதாகவும் இத்துப்பாக்கி பொலித்தீனினால் சுற்றப்பட்டுக் காணப்பட்டதாகவும்; பொலிஸார் கூறினர்.
கடந்த யுத்த சூழ்நிலையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் இத்துப்பாக்கி மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago