Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் தற்போது சீராகக் கிடைப்பதில்லையென அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
துறைநீலாவணைக் கிராமத்தில் 2007ஆம் ஆண்டு முதல் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. தற்போது நீர் சீராகக் கிடைக்காமையால், சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அம்மக்கள் கூறினர்.
இது தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண பொதுமுகாமையாளர் என்.சுதேசனிடம் கேட்டபோது, 'துறைநீலாவணைக் கிராமத்தில் நீர் பிரச்சினை ஏற்படுவதற்கு வரட்சி காரணமாகும். அத்துடன், ஏனைய கிராமங்களில் நீர்ப்பாவனை அதிகமாக இருப்பதால், இக்கிராமத்துக்கு போதியளவு நீரை வழங்க முடியாமலுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஏனைய இடங்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவைச் சற்றுக் குறைத்து துறைநீலாவணைக் கிராமத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாட்டைச்; செய்துள்ளோம். மேலும், இக்கிராமத்துக்கு கொண்டாவட்டுவானிலிருந்து பிறிதொரு நீர்வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் வேலை 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளது. விரைவில் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள குடிநீர் பிரச்சினை தீரும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago