Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வட பகுதி இளைஞர், யுவதிகள் பலருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில், தெல்லிப்பளையில் அலுமீனியத் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை இந்திய கம்பனிகளின் இயக்குநர் ரீ. தில்லைராஜ் தெரிவித்தார்.
எலிபெண்ட் மெட்டல் அன்ட் அலுமீனியம் வேர்க்ஸ் பிரைவேற் லிமிட்டெட் நிறுவனம் இந்த தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளது.
இதில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இந்திய தூதரகத்தின் யாழ் இணைத்தூதரக இணைத்தூதுவர் என். நடராஜன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
30 minute ago
1 hours ago