2025 மே 21, புதன்கிழமை

நகைகள் கொள்ளை ; நால்வர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கருகில், வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி, புதிய டச்பார் வீதியிலுள்ள நகை உற்பத்தியாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, சாமி அறையில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நகை உற்பத்தி நிலையத்தில் இருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் 68 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டினுள் மிளகாய் தூளை தூவிவிட்டு, இந்தக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள், காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .