Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் அறுவடை விழா, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களம், வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில், விவசாய அறுவடை விழா, ஓட்டமாவடி மஜ்மா கிழக்கு சுபைர் காஜியார் தோட்டத்தில் இன்று (16) நடைபெற்றது.
தியாவட்டவான் விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, நஞ்சற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட தும்பை அறுவடை செய்து வைக்கப்பட்டதுடன், நஞ்சற்ற முறையில் தோட்டப் பயிர்களை எவ்வாறு உற்பத்தி செய்வது தொடர்பில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago