2025 மே 15, வியாழக்கிழமை

நல்லடக்கம்…

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் பூதவுடல், ஆலையடிச்சோலை மையானத்தில் இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரின் பூதவுடல், அவர் அதிபராகக் கடமையாற்றிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்குக் கொண்டுவரப்பட்டு, அங்குள்ள மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா உட்பட அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், குடும்பத்தினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பிரின்ஸ் காசிநாதர், கடந்த 12ஆம் திகதியன்று, தனது 93ஆவது வயதில் காலமானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .