2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நல்லாட்சி அரசை வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில் 

'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 25 வருடங்களாக கல்முனை மக்களுக்களை வாக்குகளுக்காக ஏமாற்றி வருகின்ற வேளை, கடந்த பொதுத்தேர்தலின் போது நல்லாட்சி அரசாங்கத்துக்கென வாக்களித்த கல்முனை மீனவ மக்கள் மீது நல்லாட்சி அரசாங்கம் கவனஞ் செலுத்தாதுள்ளமை மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.' என உலமாக் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14), தெரிவித்தார்.

மேற்கொண்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
'கல்முனை மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள் தமக்கான மீன்பிடி துறைமுகமொன்று இல்லாமையினால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வாடைக்காற்று வீசுங் காலங்களில் தமது வள்ளங்களை உரிய இடங்களில் நிறுத்துவதற்கு இடமின்றி வெளி மாவட்டங்களில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்,

'மீன்பிடி துறைமுகத்துக்கென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட காணியில் வேறுதேவையின் பொருட்டு  பயன்படுத்தப்படுகின்றமை அப்பகுதி மீனவ மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் எனத் தெரிவித்தார். அரசாங்கம் இம்மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து அம்மக்களின் வாழ்வு நல்வாழ்க்கையாக மாற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,' எனத் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X