2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத் தரப்படுத்தலில் மட்டக்களப்புக்கு நற்சான்றிதழ்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 12 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

நாடாளுமன்ற பொது கணக்காய்வுக் குழுவின் மாவட்ட ரீதியான அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளின் தரப்படுத்தல் ஆய்வறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 93 புள்ளிகள் கிடைத்துள்ளதுடன், 'மிக நன்று' என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது என, மாவட்டச் செயலாளர்; திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கணக்காய்வுத் திணைக்களத்தின் சரிபார்த்தலுடன் தினமும் இணையத்தளம் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு, 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி டிசெம்பர் 31ஆம் திகதிவரையான ஒருவருட ஆய்வின்படியே மாவட்டம் இத்தரப்படுத்தலில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நற்சான்றிதழ்  செவ்வாய்க்கிழமை (11) மாலை மின்னஞ்சல் மூலம் கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X