2025 மே 15, வியாழக்கிழமை

’நாமே பயிரிட்டு நாமே உண்போம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாமே பயிரிட்டு நாமே உண்போம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், 10 இலட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டி வளர்க்கும் திட்டம், வாகரையிலும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேச கமநல சேவை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகரை கமநல சேவைகள் நிலையத்தில், இன்று (08) இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்டுமுறிவு விவசாய அமைப்பின் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் கலந்துகொண்டு, சம்பிரதாயபூர்வமாக பலாமரக் கன்று ஒன்றை நாட்டி வைத்து, பிரதேசமெங்கும் பலாமரக் கன்றுகள் நடும் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், வாகரை கமநல சேவைகள் நிலைய பிரிவின் விவசாய ஆராய்ச்சி உதவி உற்பத்தியாளர் கே. பதிராங்கன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.பிரசாந்த், ஏ.  துரைராஜ், எம். யுனேஸ்காந்த், என். உதயதேவி, பி. ஜனகராஜ் ஆகியோருர் உட்பட பிரதேசத்தின் விவசாயிகளும் கலந்துகொண்டனர். ‪


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .