2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நிதி திரட்டுவதற்கான சைக்கிள் சவாரி மட்டக்களப்பில் நிறைவு

Editorial   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

தேவை நாடும் மகளிர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான சைக்கிள் சவாரி, புத்தளத்தில் ஆரம்பமாகி, அநுராதபுரத்துக்குச் சென்று, மட்டக்களப்பில் இன்று (03) காலை நிறைவடைந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உட்பட கொழும்பு, ஏனைய பகுதிகளில் இருந்து 30 பேர், இந்த சைக்கிள் சவாரியில் கலந்துகொண்டனர்.

இவர்கள், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் வைத்து, தேவை நாடும் மகளிர் அமைப்பின் பிரதிநிதிகளால் மலர்ச் செடிகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.

மேற்படி அமைப்பின் இணைப்பாளர் கந்திரா தியாகராசா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பகுதி பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X