2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு முன்னெடுப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மண்முனைப்பற்று பிரதேச சபையில் பல வருடங்களாக தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றும் ஊழியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி, இன்று (02) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆரையம்பதிலுள்ள மண்முனைப் ற்று பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இங்கு கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு ஊழியர்களை நியமனம் செய்யும் போது, முறைகேடாக நடந்து கொள்ளாமல், தற்காலிக ஊழியர்களாகக் கடமையாற்றும் ஊழியர்களையே நிரந்தர ஊழியர்களாக நியமனம் வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இங்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன் ஆகியோரிடம் மகஜரொன்றையும், தற்காலிக ஊழியர்கள் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X