Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
14 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக, வெகுவாகப் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக, சவுதி அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம், நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம், இதுவரையில் தமக்கு வழங்கப்படாமலுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தையடுத்து, முழுமையாகவும் பகுதியளவிலும் சொத்துகளை இழந்த மக்களுக்காக, வீடமைப்பு நிர்மாணத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃபின் முயற்சியின் பயனாக, சவூதி அரேபிய நாட்டின் ஸகாத் நிதியைக் கொண்டு, நவீன வீடமைப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலிம் நகர் கிராமத்துக்கு அண்மையில் அமைந்துள்ள நுரைச்சோலைப் பிரதேசத்தில், சுமார் 60 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பிலேயே, இந்த வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
2006ஆம் ஆ ண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 550 மில்லியன் ரூபாய் செலவில், 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 12 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் இதுவரைக்கும் அவ்வீடுகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என, மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, உயிர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையின் போது, தேசிய இனவிகிதாசார அடிப்படையில் அவ்வீடுகளைப் பகிர்ந்தளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது என்றும் இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வீடுகளை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்தில், மகளிர் பாடசாலை, ஆண்கள் பாடசாலை, நவீன வைத்தியசாலை, பாரிய மண்டபத்துடனான சனசமூக நிலையம், பள்ளிவாசல், பஸ் தரிப்பு நிலையங்கள், விளையாட்டு மைதானம், நவீன சந்தைக் கட்டடங்கள் மற்றும் நவீன ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளும் பொது நிறுவனங்களுக்கான கட்டடங்களும், விலங்கு மற்றும் பறவைகள் போன்றவற்றின் வாழிடமாக மாறியுள்ளன என்றும் இங்கு பொறுத்தப்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், களவாடப்பட்டும் சேதமடைந்தும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு இன்னல்களுடன், உறவினர்களின் இல்லங்களிலும், இன உறவுகளின் வீடுகளிலும், கடந்த 14 வருடங்களாக தற்காலிகமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு, துரித கதியில் இவ்வீடுகள் திருத்தியமைக்கப்பட்டு கையளிக்கப்பட வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago