2025 மே 02, வெள்ளிக்கிழமை

நிழல் மரங்கள் நடுகைத் திட்டம்

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை வட்டார வனத் திணைக்களத்தால், வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் வழிகாட்டலில், நிழல் தரக்கூடிய மர நடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து, வாழைச்சேனை செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலய மைதானத்தில் நிழல் தரு மரங்கள் நடும் நிகழ்வு, இனறு (08) நடைபெற்றது.

வாழைச்சேனை வட்டார வன விரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொப்பிக்கலை பகுதி வன உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸ், செம்மண்ணோடை கிராம அதிகாரி எம்.எம்.அன்வர் சதாத், குறித்த வித்தியாலய அதிபர், செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், மாதர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X