2025 மே 09, வெள்ளிக்கிழமை

நீரில் பாய்ந்த லொறி

Freelancer   / 2022 ஜூலை 03 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக லொறி வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி வலையிறவு ஆற்றில் வீழ்ந்த சம்பவம்  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் இரண்டு லொறிகள் சென்ற சமயம், ஒரு லொறியை மற்றைய லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது, இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.

வீதியை விட்டு விலகி ஆற்றுக்கு குடைசாய்ந்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் இச்சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X