Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 06 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
குழுக்குனாவிக் குளத்தின் நீர் மட்டத்தை அவதானிக்க, அதிகாரிகள் குழுவொன்று, நேற்று (05) மாலை நேரடி விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி தி.தட்சணகௌரி, கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம், பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுகாகரன், பிரதேச உதவியாளர் ரி.மதியழகன் உள்ளிட்டோர் இவ்விஜயத்தின்போது கலந்துகொண்டிருந்தனர்.
புழுக்குனாவிக் குளத்தின் நிர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், அதை நம்பி சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
பழுக்குநாவை நீர்ப்பாசனக் குளத்தின் முழு நீர்க் கொள்ளளவு 31 அடி 3 இஞ்சி ஆகும். எனினும், தற்போது 16 அடி 10 இஞ்சி நீர்க் கொள்ளளவுதான் உள்ளது.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திலிருந்து நீரைக் கொண்டு வருவதற்குரிய முயற்சிகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago