Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனால் நிதி ஒதுக்கப்பட்டு, பகுதியளவு கட்டப்பட்டுக் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற பொது நூலகக் கட்டடத்தை நிறைவு செய்து, பொதுமக்களின் பாவனைக்குக் கையளிக்க, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனால் நீண்ட காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வருடம் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்த போதும், தேசியத் திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் ஆரம்பிக்கப்பட்டிருந்த இக்கட்டடத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியின் பயனாக, தேசியத் திட்டமிடல் திணைக்கத்தின் அனுமதியைப் பெற்றதோடு, கடந்த 08ஆம் மாதம் திறைசேரி ஊடாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மதிப்பீடுகள் மற்றும் முறையான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்.
அத்தோடு, மட்டக்களப்பில் தற்போது இயங்கும் நூலகத்தின் வசதி நிலைமை தொடர்பிலும், அமைத்து இடையில் நிறுத்தப்பட்டுள்ள நூலகத்தின் அவசியம் தொடர்பிலும் தெளிவுபடுத்தி பிரதமர் அவர்களின் அமைச்சினூடாக ரூபாய் 169.97 மில்லியனுக்கான அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கச் செய்திருந்தார்.
இந்த சமர்ப்பிப்பானது, கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இத்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எவ்வித ஆரவாரமுமின்றி சிறந்த திட்டமிடலின் மூலம் மேற்படி செயற்பாடு மேற்கொள்ளபபட்டுள்ளது. அத்துடன், இது போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago