Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பதற்கு சீரான ஏற்பாடுகளைச் செய்து தந்து, விவசாயிகளின் வாழ்வில் விடிவு காண, அதிகாரிகள் உதவ வேண்டுமென, உன்னிச்சைகுளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்த கோரிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு மாவட்டத் திட்டமிடல் பிரிவு இன்னமும் நிரந்தரமான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
“கடந்த காலங்களிலும் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை, நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் திருப்திப்படும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து தரவில்லை.
“விளையும் பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடினர்.
“அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 நெற் களஞ்சியங்களிலும் பிரதேச விவசாயிகள் தமது விளை நெல்லை விற்க ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றார்.
27 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
49 minute ago
52 minute ago