Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால், புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கு, ஆதாயம் அளிக்கும் நல் வாய்ப்புக்ளை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில், மேற்படி அமைச்சால் புத்தாக்க விவசாய வியாபாரத் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் நேற்றும் இன்றும் மட்டக்களப்புக் கச்சேரியில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றன.
அமைச்சின் அதிகாரிகள் நேரடியாகக் கலந்துகொண்டு, நேர்முகத் தேர்வுகளை நடத்தினர்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
இதன்போது இலங்கை இலவங்கப்பட்டை மற்றும் நறுமணச்சரக்குகள், வெட்டிய பூக்கள் மற்றும் இனத் தொகுதிப் பூக்கள், சிறிய விவசாய உபகரணங்கள், மீன்பிடி மற்றும் நீரியல்வள அலங்கார மீன்கள், விவசாயம் சார் கழிவுப்பொருள்கள் தீர்வுகள், கால்நடை வளர்ப்பு பால் உற்பத்திகள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் சக்தி வலு தீர்வுகள், மூலிகைச் செடிகள் மற்றும் மருந்து வகைகள், பழவகை மற்றும் மரக்கறி வகைகள், உணவு மற்றும் மென் பானங்கள், கழஞ்சியப்படுத்தல் வசதிகள், சேதன விவசாயம் உள்ளிட்ட பல விடயங்களில் ஆர்வம் செலுத்துகின்றவர்களுக்கு இச்செயற்றிட்டத்தின் மூலம் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால் உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago