2025 மே 14, புதன்கிழமை

நோயாளியைக் காணவில்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரைக் காணவில்லையென, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில், மனநல வைத்தியப் பிரிவில் கடந்த17ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை - 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல்.இமாமுத்தீன் (வயது 45) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளாரென, அவரது மனைவி, பொலிஸில் முறையிட்டுள்ளார்.

நேற்று (19) அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் காணாமல் போயிருப்பது தெரியவந்ததாக, அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைத்தியசாலைப் பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகமும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .