Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நுகர்வுக்குப் பொருந்தாத 575 கிலோகிராம் கொத்தமல்லியை சனிக்கிழமை (13) கைப்பற்றியதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.புலேந்திரகுமார் தெரிவித்தார்.
கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி கொழும்பிலிருந்து ஏறாவூர் பிரதேசத்துக்கு லொறியொன்றில் கொண்டுவரப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த லொறியைச் சோதனையிட்டபோது, ஒவ்வொரு பைக்கெட்டிலும் 25 கிலோகிராம் நிறைகொண்ட 23 கொத்தமல்லிப் பக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
வேறு சரக்குகளுக்கு மத்தியில் மறைத்துவைத்து இக்கொத்தமல்லி கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இக்கொத்தமல்லியை கொள்வனவு செய்தமைக்கான அங்கிகரிக்கப்பட்ட பற்றுச்சீட்டை கொத்தமல்லியை கொண்டுவந்த வர்த்தகர்கள் வைத்திருக்கவில்லை.
கைப்பற்றப்பட்ட கொத்தமல்லியின் மாதிரியை கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கொத்தமல்லி மனித நுகர்வுக்கு உகந்ததா, பழுதானமையால் பழபழப்பாக்கப்பட்டதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்யப்படும். இது தொடர்பான அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
27 minute ago
42 minute ago