Suganthini Ratnam / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 10 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (24) தொடரப்பட்ட வழக்கின்போது, மேற்படி 10 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்பிணைகளில்; செல்ல அனுமதிதத்ததுடன், எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தினங்களாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக கூறி; ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் ஈ.கருணாகரனினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில்ல் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி, இரு தரப்பினரிடையேயும் சமாதான நிலையை ஏற்படுத்த முற்பட்டபோதும், எழுந்த முரண்பாடுகள் காரணமாக வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதி ஏறாவூர் நீதிமன்றத்தில் நடைபெறும் என்ற உத்தரவினை பிறப்பித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago