2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க் கிளைக்கான நிர்வாகத்தெரிவு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பகிரங்கசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் ஏறாவூர்க் கிளைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் தீர்மானங்கள் நிறைவேற்றுதலும் ஏறாவூர் அரபா மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஏறாவூர் கிளையின் புதிய தலைவராக எம்.கே.முகைதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தலைவராக எஸ்.எம்.மீரா முஹைதீன், செயலாளராக எஸ்.எம்.சுலைமாலெப்பை, உதவிச் செயலாளராக ஏ.சி.எம்.சயீட், பொருளாளராக எஸ்.எச்.எம்ஹுஸைன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக  எம்.எஸ்.எம்.அபுல் ஹஸன் மற்றும் எம்.எஸ்.எம்.பாறூக் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்தல், சங்க அங்கத்தவர்களினதும் அவர்களின் பராமரிப்பிலுள்ளவர்களினதும் நலனோம்பு விடயங்களில் கவனம் செலுத்துதல், ஓய்வூதியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்மைகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இக்கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டதாக அதன் செயலாளர் எஸ்.எம்.சுலைமாலெப்பை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X