2025 மே 09, வெள்ளிக்கிழமை

படகில் ஹெரோய்ன், ஐஸ் போதைப்பொருள் மீட்பு

Princiya Dixci   / 2022 மே 23 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் படகு ஒன்றில் இருந்து 09 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோய்னும் 01 கிராம் 110 மில்லிக்கிராம்  ஐஸ் போதைப்பொருளும், விசேட அதிரடிப் படையினரால் நேற்று (22) மாலை மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப் படையுடன் இணைந்து இராணுவ புலனாய்வு பிரிவினர், வாழைச்சேளை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  றோலர் படகை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது மேற்படி போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன், அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிறைச்துறைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞனை கைதுசெய்து, வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X