Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கோறளைப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி ஆற்றைக் கடப்பதற்காகப் பயன்படுத்தப்படும் படகுப்பாதை கடந்த ஒரு மாதமாக இயங்காமையால், பொதுமக்கள் பரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்படகுப்பாதை பழுந்தடைந்துள்ள நிலையில், இதற்குப் பதிலாக 2 தோணிகள், கிண்ணையடி ஆற்றைக் கடப்பதற்குப் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இத்தோணிகள் மூலம் ஆபத்தான போக்குவரத்தை மேற்கொள்வதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆற்றில் முதலைகள் வாழ்வதால், தோணிகளில் பயணிப்பது ஆபத்து எனவும் பொதுமக்கள் கூறினர்.
கிண்ணையடிக் கிராமத்திலிருந்து முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி ஆகிய கிராமங்களுக்கு கிண்ணையடி ஆற்றின் ஊடாகவே போக்குவரத்துச் செய்ய வேண்டியுள்ளது.
மேலும், கிண்ணையடியிலிருந்து முருக்கன்தீவுக்கு சுமார் 300 மீற்றர் தூரம் ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. மழைக் காலத்தில் ஆறு பெருக்கெடுத்தால், சுமார் 500 மீற்றர் தூரம்வரை ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது.
இப்படகுப்பாதை பழுதடைந்துள்ளமை தொடர்பில் கோறளைப்பற்றுப் பிரதேச சபை நிர்வாகத்திடம் பல தடவைகள் தெரியப்படுத்தியபோதும், அப்படகுப்பாதையைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கை இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் கூறினர்.
இது தொடர்பாகக் கோறளைப்பற்றுப் பிரதேச சபை செயலாளர் சாலி முஹமட் சிஹாப்டீனிடம் கேட்டபோது, 'படகுப்பாதையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படகுப்பாதை விரைவில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
'பொதுமக்களின் இலகுவான போக்குவரத்துக் கருதி பிரதேச சபையால் இப்படகுப்பாதை கொள்வனவு செய்யப்பட்டு கிண்ணையடி, முருக்கன்தீவுக் கோவில்களின் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. மக்களுக்கு இலவச சேவையை நோக்கமாகக் கொண்டதால், பிரதேச சபை பயணக் கட்டண அறவீட்டை மேற்கொள்வதில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago