Niroshini / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 6 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (16) இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் குடிவரவு - குடியகள்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி, வாழைச்சேனை கடல் வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.
தொடர்ந்து 12 நாட்கள் படகில் பிரயாணித்த இவர்கள், அவுஸ்ரோலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவுஸ்ரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த படகையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், அவர்கள் அங்கிருந்து உடனடியாக விசேட விமானம் மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதையடுத்து இவர்களை கைது செய்த விமான நிலையப் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago