Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 மே 29 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிறிய பல சரக்கு கடையொன்றில் இருந்த பணப் பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 8.30 மணியளவில், அந்தக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பணப்பெட்டியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் வயது போன பெண்ணொருவரால் இந்த சிறிய பல சரக்கு கடை நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்தக் கடையில், குறித்த பெண் இருந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இனம் தெரியாத இளைஞர் ஒருவர், அங்கிருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து பொது மக்கள் கொள்ளைடித்துச் சென்ற இளைஞனை தேடியும் அவர் பிடிபடவில்லை என தெரிய வருகின்றது.
இது தொடர்பாக, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .