2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பண்ணையாளர்களுடன் ஒரு கலந்துரையாடல்

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடைப் பண்ணையாளர்களுடனான  கலந்துரையாடல், மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில், மாவட்டச் செயலகத்தில், நேற்று (25)  மாலை நடைபெற்றது.

கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் திணைக்களத்துக்குமிடையில்  காணப்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் கால்நடை வளர்ப்பில் அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், எதிர்காலத்தில் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாகவே, இந்தக்  கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கால்நடைப் பிரச்சினைகள் சம்மந்தமாக, கால்நடை வைத்தியர்களும் அதனை சார்ந்த அதிகாரிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பாலுற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற விலை நிர்ணயப் பிரச்சினைகள், கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்கள், அதனைத் தீர்த்து வைப்பதற்காக கால்நடை வெளிக்களக் உத்தியோகத்தர்கள்  மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறைவாகக் காணப்படுவதற்கான காரணங்கள், கால்நடைவளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீடுகள் பற்றி இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X