2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத எதிர்ப்புக்கான மாபெரும் பொதுக் கூட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர் நகரில், பயங்கரவாத எதிர்ப்புக்கான மாபெரும் பொதுக் கூட்டமொன்றை நடத்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளதாக, சிலோன் தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, அறிவித்தல் விடுத்துள்ளது.

ஏறாவூர் - புன்னைக்குடா வீதியில், நாளை (22) மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், ஆண்களும் பெண்களும் பங்குபற்றிப் பயன்பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஏறாவூர் நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் மேற்படி பொதுக் கூட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, பயங்கரவாத எதிர்ப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில், “போதையால் ஏற்படும் அழிவு”, “பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கும் இஸ்லாம்”, “எது நேர்வழி” ஆகிய அம்சங்களில் சிறப்புச் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளதாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X