2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘பயங்கராவத எதிர்ப்புச் சட்டத்தை சிறுபான்மைக் கட்சிகள் தோற்கடிக்கலாம்’

வா.கிருஸ்ணா   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடியுமென்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் சிறுபான்மைச் சமூகத்தின் அத்திபாரத்தில் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குத் தனது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் இதை நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்பதற்காக தென்னிலங்கையிலுள்ள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேசுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போ​னெவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றுவதுபோன்று பாவனைசெய்து, அதிலும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கொண்டுவர முற்படும் செயற்பாடு முற்றிலும் ஆபத்தானதென்றும் தெரிவித்த அவர், நீதித்துறையின் சுதந்திரம் ஒடுக்கப்படும் சூழ்நிலை ஏற்படுமென்றார்.

இந்த நாட்டை  இராமர் ஆட்சி செய்கின்றாரா அல்லது இராவணன் ஆட்சி செய்கின்றாரா என்பது தம்மைப் பொறுத்தவரையில் முக்கியமல்ல என்று தெரிவித்ததோடு, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X