Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கில்;, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான மாகாணமட்டப் பயிற்சிநெறி மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
இரு தினங்களுக்கு நடைபெறுகின்ற இப்பயிற்சிநெறியில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிர்வாகத்தில் கடமையாற்றும் சுமார் 25 தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் இப்பயிற்சிநெறியை ஆரம்பித்துவைத்தார்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை சலீம், 'திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் உயிர்வாயுத் தொழில்நுட்பம் அதிக நன்மையைத் தரக்கூடியது. இந்த உயிர்வாயு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், பல்வகைப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
உயிர்வாயு தொழில்நுட்பத்தின் மூலம் மீள்சுழற்சி முறையில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத விதத்தில் மின்சாரம், இயற்கை எரிவாயு, பசளை, நீர் என்பவற்றையும் சுழற்சி முறையில் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
இதனால், நாம் இயற்கைச் சூழலை கேடு விளைவிக்காத விதத்தில் பேணுவதுடன், எமது பொருளாதாரத்தையும் கூடியளவு மீதப்படுத்தவும் முடிகிறது' என்றார்.
இன்றைய நிகழ்வில் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளரும் வளவியலாளருமான அனுலா அன்ரன், பொறியியலாளரும் உயிர்வாயுத் தொழில்நுட்ப நிபுணருமான றோஹித ஆனந்த, திட்ட முகாமையாளரும் பொறியியலாளருமான தமித சமரகோன் ஆகியோரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தொழில்நுட்பவியலாளர்களும்; கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago