2025 மே 15, வியாழக்கிழமை

பாடசாலைகளின் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் போதைத் தடுப்புச் செயலணியின் வழிகாட்டலில், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பாடசாலை வாரத்தையொட்டி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுல்லியா வித்தியாலயம், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில், இன்று (25) மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இப்பேரணிக்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச பள்ளிவாசல்கள், கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச விளையாட்டுக் கழகங்கள், சமூகமட்ட அமைப்புகள் என பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் ஆதரவு வழங்கியிருந்தன.

பிறைந்துறைச்சேனை சாதுல்லியா வித்தியால அதிபர் எம்.சி.ஐப்கான் தலைமையில் இடம்பெற்ற பேரணியின் போது, போதை ஒழிப்புத் தொடர்பான வீதி நாடகமும் இடம்பெற்றது.

மேலும், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபர் எஸ்.யூ.சுபைதீன் தலைமையில் இடம்பெற்ற பேரணியில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், ஒட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ்.கே.றகுமான், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.கபூர், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .