2025 மே 21, புதன்கிழமை

பாடசாலையின் முகப்பு வாயில் திறப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியில் புதிதாக அமைக்கப்பட்ட முகப்புவாயில், வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தா.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், பிரதம அதிதியாகக் கலந்துகொணடார்.

மாகாண விவசாய அமைச்சர்களுக்கான பிரத்தியேக செலவீன ஒதுக்கீடுகளில், அமைச்சருக்கான ஒதுக்கீட்டில் செலவீனங்களைக் குறைத்து அதனை மீதப்படுத்தியும் அமைச்சின் ஊழியர்களின் பங்களிப்பின் மூலமும், கணேசா வித்தியாலயத்துக்குரிய முகப்பு வாயிலை அமைப்பதற்கான நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதேபோன்று, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், சம்பூர் மகா வித்தியாலயம், கல்முனை வெஸ்லி கல்லூரி போன்றவற்றுக்கு, விவசாயக் கண்காட்சி செயற்திட்டத்தின் மூலம் முகப்பு வாயில் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .