2025 மே 19, திங்கட்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

எஸ்.சபேசன்   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் உயர், கனிஷ்டப் பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி  நடத்தப்படவுள்ளது.

கல்முனை வடக்கு, ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா. முரளிஸ்வரனின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இக்கட்டுரைப் போட்டி, உயர் பிரிவு 12-13 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குரிய  கட்டுரை, “ஆரோக்கியமான உணவு – நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் செலுத்தும் செல்வாக்கு”, “தொற்றுத்தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு”, “வைத்திய சேவையில் ஊடகத்துறையின் பங்களிப்பு”, “மனித சமூக மேம்படுத்தலில் உளநலத்துறையினர் ஆற்றும் பங்களிப்பு” ஆகிய தலைப்புகளில் 200- 350 சொற்களில் அமைதல் வேண்டும்.  

கனிஷ்ட பிரிவில் 6-11 வகுப்பு  மாணவர்களுக்குரிய கட்டுரை, “வைத்திய சேவையும் பொதுமக்களின் பார்வையும்”, “மனித வாழ்வில் தொற்றா நோயின் ஊடுருவல்”, “மாணவர் சமுதாயம் தொற்றுத்தடுப்பில் ஆற்றவேண்டிய பங்களிப்பு”, “கட்டிளமைப்பருவத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்” ஆகிய தலைப்புகளில் 150-250 சொற்களில் அமைதல் வேண்டும்.

மேற்படி கட்டுரைகளை, இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்பு, மாணவர்களில் கையெழுத்துப்பிரதி, அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு, கடிதஉறையின் மேல் மூலையில், “கட்டுரைப்போட்டி – 2018” எனக் குறிப்பிட்டு, சுகாதார கல்விப் பிரிவு, ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X