Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கொரோனா வைரஸின் தொற்றின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வறிய மக்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சில கிராமங்களுக்கு, வாழைச்சேனை மீனவர்களால் மீன்கள் வழங்கப்பட்டன.
அதனடிப்படையில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களால், மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கான மீன்கள் கையளிக்கும் நிகழ்வு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (26) நடைபெற்றது.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு, முறுத்தானை போன்ற கிராமத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தலா ஒன்றரை கிலோகிராம் எடையுடைய மீன்கள் இங்கு கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தால் வழங்கிய தகவலின் பிரகாரம், போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படும் மக்களுக்கு மீன்கள் வழங்கி உதவும் வகையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் மீனவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் மீன்கள் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சன் குரூஸ், கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.முஹமட் இம்தியாஸ், வாழைச்சேனை பொதுச்சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கம், அல்ஷபா மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மீனவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
05 May 2025