Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஒக்டோபர் 16 உலக உணவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தால் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்றது.
உதவி விவசாயப் பணிப்பாளர் ஆர். பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் ஆர். ஹரிஹரன், விதை உற்பத்தி திணைக்கள விவசாய பிரதிப் பணிப்பாளர் எஸ். சிவநேசன், உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இப்போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயப் பிரிவுகளிலிருந்து வருகைதந்திருந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு போட்டி விதிமுறைகளுக்கமைவாக உணவுகளைத் தயாரித்திருந்தனர்.
இப்போட்டியில் தெரிவுசெய்யப்படுவோர் கண்டி பேராதனையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட பாரம்பரிய உணவு தயாரிப்புப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .