Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய, கிழக்கு மாகாணம் அரசியல் ரீதியாக எக்காலமும் இலங்கையிலுள்ள ஒரு மாகாணமாகவே கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்து, ஒரு இலட்சம் பேரின் கையொப்பத்துடன் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தால் அனைத்துத் தரப்பினருக்கும் பிரகடனமொன்று அனுப்பப்படவுள்ளதாக தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் செயற்பாட்டாளர் முகம்மட் றுஸ்வின், இன்று (06) தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்புப் பேரவை உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையிலுள்ள பிரதிநிதிகளுக்கு இந்த பிரகடனம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்படி பிரகடனத்தில் தற்போதைய அரசியல் சாசன தீர்வு முயற்சியில் ஈடுபடும் இவ்வேளையில், முஸ்லிம்களின் தாயகம் கிழக்கு மாகாணம் என்பதுடன், தங்களின் அரசியல் உரிமைகளைக் கோரும் உரிமையுள்ள தனி இனமாகும் என்பதோடு, சுயநிர்ணய உரிமையும் முஸ்லிம்களுக்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணம் அரசியல் ரீதியாக எக்காலமும் இலங்கையிலுள்ள ஒரு மாகாணமாகவே கொள்ளப்படவேண்டும் என்பதுடன், தமிழ் மொழியைப் பிரதான நிர்வாக மொழியாகக் கொண்ட மாகாணமாக செயற்படுவதுடன், இன்றைய திகதியில் உள்ள இன விகிதாசாரப் பரம்பலைக் குலைக்கும் வகையிலான குடியேற்றங்கள், அபிவிருத்திகள் தவிர்க்கப்படுவதுடன், கிழக்கின் தற்போதைய எல்லை தொடர்ந்து பேணப்படவேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
59 minute ago
1 hours ago
3 hours ago