Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத ஒரே நாட்டில், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு, சிறுபான்மையின மக்கள் தயாராக உள்ளனர் என, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளருமான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தேசிய உணவு உற்பத்தி மாதத்தையொட்டி, முயற்சியான்மையாளர் தின வைபவம், மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில், நேற்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“சிறுபான்மையின மக்கள், இந்த நாட்டினுடைய அடிப்படைத் தத்துவங்களை தகர்த்தெறிய மாட்டார்கள். அவர்கள், ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்குச் சம்மதித்தள்ளார்கள். அதற்கேற்றவாறு அவர்கள் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தி, தென்னிலங்கைக்கு சென்றுள்ளது.
“இதனைக் குழப்புவதற்காக, ராவண பலய போன்ற அமைப்புகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில், தேரர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளாரென்று, வதந்தியைப் பரப்புகின்றன.
“வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துப் பக்கங்களிலுமுள்ள மக்கள், இந்த நாட்டினுடைய இயற்கையான அரசியல் எது என்பதை அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கமைவாக, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் சிந்திக்கின்றனர்.
“புதிய அரசமைப்பு, தற்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்புதிய அரசமைப்புத் திட்டத்தை, சரியான முறையில் காத்திரமாக முறையில் செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், மிகச் சிறந்த அரசியல் தலைவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இருக்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
3 hours ago